கற்பக விநாயகா குளோபல் பள்ளி 5 ஆம் ஆண்டு விளையாட்டு விழா

கற்பக விநாயகா குளோபல் பள்ளி 5 ஆம் ஆண்டு விளையாட்டு விழா;

Update: 2025-08-30 10:15 GMT
கற்பக விநாயகா குளோபல் பள்ளி 5 ஆம் ஆண்டு விளையாட்டு விழா செங்கல்பட்டு மாவட்டம், படாளம் அடுத்த சின்னகொளம்பக்கத்தில் உள்ள கற்பக விநாயகா குளோபல் பள்ளி 5 ஆம் ஆண்டு விளையாட்டு விழா பள்ளி விளையாட்டு மைதானத்தில் கற்பக விநாயகா கல்வி குழுமத்தின் நிர்வாக இயக்குனர் மருத்துவர் அண்ணாமலை ரகுபதி அவர்கள் தலைமையிலும் கற்பக விநாயகா கல்வி குழுமத்தின் இயக்குனர் மீனாட்சி அண்ணாமலை அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. இதில் பள்ளி முதல்வர் முனைவர் தீபாபராப் வரவேற்புரை வழங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாட்டைச் சார்ந்த இந்திய சர்வதேச கிரிக்கெட் வீரர் நடராஜன் கலந்து கொண்டு பள்ளி அளவில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு கோப்பைகளை வழங்கி மாணவர்களை உற்சாகப்படுத்தி சிறப்புரை ஆற்றினார். முன்னதாக மாணவ மாணவியர் பங்கேற்ற உடற்பயிற்சிகள், பரதநாட்டியம் ,மேற்கத்திய நடனம், யோகா, கராத்தே , சிலம்பம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Similar News