வவ்வால் வேட்டையில் ஈடுபட்டதாக 5 பேரை பிடித்து விசாரணை
அழகர்கோயில் வனப்பகுதியில் வவ்வால் வேட்டையில் ஈடுபட்டதாக 5 பேரை பிடித்து வனத்துறையினர் விசாரணை;
திண்டுக்கல் மாவட்ட வனத்துறைக்கு கட்டுப்பட்ட நத்தம் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட அழகர்கோயில் வனப்பகுதியில் வவ்வால் வேட்டையில் ஈடுபட்டதாக காளிதாஸ், சதீஷ், விஷ்வா, சுரேஷ், பசுபதி ஆகிய 5 பேரை பிடித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10-ஆயிரம் என 5 பேருக்கும் மொத்தம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.