அரக்கோணத்தில் ஏரியில் மண் எடுத்த 5 பேர் கைது

அரக்கோணத்தில் ஏரியில் மண் எடுத்த 5 பேர் கைது;

Update: 2025-09-15 04:47 GMT
அரக்கோணம் அருகே நந்திவேடந்தாங்கல் பகுதியில் மண் கடத்துவதாக அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஏரியில் அனுமதியின்றி மண் எடுத்து கொண்டிருந்த ராஜேந்திரன் (வயது 52) தாமோதரன் (38), தூர் வாசன் (40), சுப்பிரமணி (40) மற்றும் சுரேஷ் (38) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் போலீசார் வழக் குப்பதிவு செய்து மண் கடத்தலுக்கு பயன்படுத்திய பொக்லைன் எந்திரம் மற்றும் 4 டிராக்டர்களை பறிமுதல் செய்தனர்.

Similar News