பரமத்தி வேலூரில் விற்பனைக்கு வந்த 5 அடி உயர வாழைத்தார்.

பரமத்தி வேலூரில் விற்பனைக்கு வந்த 5 அடி உயர வாழைத்தார் விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயி.;

Update: 2025-09-17 13:03 GMT
பரமத்தி வேலூர், செப். 16:  பரமத்தி வேலூர் தினசரி வாழைத்தார் சந் தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட சுமார் 5 அடி உயர முள்ள 17 சீப்புகளைக் கொண்ட வாழைத்தாரை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூரைச் சேர்ந்தவர் பழனியப்பன் (56). இவர் தனது வீட்டில் ரஸ்தாளி ரக வாழை மரங்களை வளர்த்து வருகிறார். பெரும் பாலும் வாழைத்தார்களில் எட்டு முதல் அதிகபட்சமாக பத்து சீப்பு வரையே இருக்கும். ஆனால், இவரது வீட்டில் உள்ள ரஸ்தாளி ரக வாழைத்தார் 17 சிப்புகளைக் கொண்டதாக இருந்தது. இதனால் எடை தாங்காமல் மரம் சாய்ந்ததால் சுமார் 5 அடி உயரமும் 17 சீப்பு வாழைத் தாரை வெட்டி பரமத்தி வேலூர் தினசரி வாழைத்தார் சந்தைக்கு பழனியப்பன் கொண்டுவந்தார்.

Similar News