போச்சம்பள்ளி வார சந்தையில் 5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

போச்சம்பள்ளி வார சந்தையில் 5 கோடிக்கு ஆடுகள் விற்பனை;

Update: 2025-10-19 13:36 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வாரச்சந்தையில் நாளை தீபாவளி பண்டிகை முன்னிட்டு இன்று நடந்த சந்தையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் குவிந்தன. இதை வாங்க வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் ஆடுகளை வாங்க குவிந்தனர் இதனால் ஆட்டு சந்தை களை கட்டியது மேலும் ஒரு ஆடு பத்தாயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் விற்பனை செய்யப்பட்டதால் இன்று நடந்த சந்தையில் 5 கோடிக்கு ஆடுகள், கோழிகள், மற்றும் தானியங்கள், காய்கறிகள் விற்பனை நடைபெற்றது. வியாபாரிகள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Similar News