வேப்பனப்பள்ளி: ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வேளாண்மை அதிகாரி கைது
வேப்பனப்பள்ளி: ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வேளாண்மை அதிகாரி கைது;
கிருஷ்ணகிரி மவட்டம் வேப்பனப்பள்ளி அடுத்த நாடுவனப்பள்ளியை சேர்ந்தவர் கவுரிசங்கர்(47) விவசாயி. இவரது மாமியார் மங்கம்மாள் பெயரில், மானாவாரி தரிசு நில மேம்பாட்டு திட்டத்தில் மாடு வாங்கிள்ளார். அதற்கு வேளாண்துறை வழங்கும் மானியத்துக்கு விண்ணப்பித்தார். ரூ.20,000 ரூபாய் கிடைத்தது. மீதி, 12,000 ரூபாய் கிடைக்க, வேளாண் அலுவலர் ஒப்புதல் பெற வேண்டும். இதற்காக அவர் வேப்பனப்பள்ளி உதவி வேளாண் அலுவலர் முருகேசன் 5,000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதுகுறித்த புகரின் பேரில் கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீசார் லஞ்ச பணத்தை கவுரிசங்கர் கொடுக்கும் போது கையும் களவுமாக முருகேசன் பிடித்து கைது செய்தனர்.