கரூரில் ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச் சங்கம் சார்பில் 5- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம்.

கரூரில் ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச் சங்கம் சார்பில் 5- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம்.;

Update: 2025-11-18 08:48 GMT
கரூரில் ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச் சங்கம் சார்பில் 5- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம். தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நல சங்கம் சார்பில் இன்று தமிழகம் தழுவிய அளவில் மாவட்ட தலைநகரங்களில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ண போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சங்கத்தின் கரூர் மாவட்ட தலைவர் சுந்தர கணேசன் தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமசாமி மாணிக்கம் காத்த முத்து,மாவட்ட செயலாளர் கோபால் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அப்போது தேர்தல் வாக்குறுதியை அறிவித்தபடி பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 70 வயது நிரம்பிய ஓய்வூதியர்களுக்கு 10% கூடுதல் ஓய்வுதியும் வழங்க வேண்டும். ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள ஓய்வூதியர்களை பாதிக்கும் 2025 Validation நிதி மசோதா ரத்து செய்யப்பட வேண்டும். 15 ஆண்டுகள் பிடித்தம் செய்யும் Commutation தொகையை 11 ஆண்டுகளாக குறைக்க வேண்டும். புதிய மருத்துவ காப்பீடுதிட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கி முழுமையான மருத்துவ செலவு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Similar News