பழனியில் கொள்ளை மற்றும் ரௌடிசத்தில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடி மின்னல் வாய்க்கால் அவர்களுக்கு 5 ஆண்டு தண்டனை
திண்டுக்கல் பழனி;
திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆயக்குடி அடிவாரம் நெய்காரப்பட்டி உள்ளிட்ட பல இடங்களில் பொதுமக்களிடம் கத்தியைக் காட்டி வழிப்பறி செய்வது பெண்களிடம் கத்தியை காட்டி அத்துமீறுதல் மற்றும் இரவு நேரங்களில் வீட்டுக்குள் நுழைந்து கத்தி முனையில் பெண்களை மிரட்டி பணம் நகை கொள்ளையடிப்பது அவர்களிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து காவல்துறையால் பல நாட்களாக தேடப்பட்டு வந்த மின்னல் வாய்க்கால் என்பவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அவர்களின் உத்தரவின் பெயரில் பழனி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தனன்ஜெயன் அவர்களின் ஆலோசனையின்படி பழனி நகர் காவல் ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் அடிவாரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ராஜ்குமார் உள்ளிட்ட காவல்துறையினர் மின்னல் வாய்க்கால் என்பவரை பதுங்கி இருந்த இடத்தில் சுற்றி வளைத்து பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த நிலையில் தற்பொழுது அவர் மீது நிலுவையில் இருந்து குற்ற வழக்குகள் உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருக்கு நீதிமன்றத்தால் 5 ஆண்டு சிறை தண்டனையும் மற்றும் 2000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளன