ஒர்க்ஷாப் உரிமையாளரிடம் ரூ.5 ஆயிரம் வழிப்பறி 2 பேர் கைது
பல்லடத்தில் ஒர்க்ஷாப் உரிமையாளரிடம் ரூ.5 ஆயிரம் வழிப்பறி 2 பேர் கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறை;
பல்லடம் காமராஜ் நகரை சேர்ந்தவர் தேவதாசன். ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு மேற்கு பல்லடம் பெரிய விநாயகர் கோவில் அருகே உள்ள ரோட்டில் இவர் சென்றார். அப்போது இவரை வழி மறித்த 2 பேர், மிரட்டி ரூ.5 ஆயிரம், செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது தேவதாசனிடம் வழிப்பறியில் ஈடுபட்ட பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் பகுதியைச் சேர்ந்த ஜெய்லானி என்பவரது மகன் சபீர் மாலிக் (வயது 20), அருள்ஜோதி நகர் வேம்புராஜ் என்பவரது மகன் சேவியர் ரஞ்சித் (20) என தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.5ஆயிரம், 1 செல்போன் மற்றும் 1 மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.