கடந்த 5ம் தேதி ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் பலியான நிலையில் சிகிச்சை பலனின்றி மேலும் இருவர் உயிரிழப்பு-பலி எண்ணிக்கை 3ஆக உயர்வு*
கடந்த 5ம் தேதி ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் பலியான நிலையில் சிகிச்சை பலனின்றி மேலும் இருவர் உயிரிழப்பு-பலி எண்ணிக்கை 3ஆக உயர்வு*;
விருதுநகர் அருகே கடந்த 5ம் தேதி ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் பலியான நிலையில் சிகிச்சை பலனின்றி மேலும் இருவர் உயிரிழப்பு-பலி எண்ணிக்கை 3ஆக உயர்வு விருதுநகர் அருகே கோவில் புலிக்குத்தியில் கடந்த 5ம் தேதி மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான சத்ய சத்தியபிரபு பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் சம்பவ இடத்தில் ராமலட்சுமி என்ற ஒரு பெண் தொழிலாளி பலியான நிலையில் 6 தொழிலாளர்கள் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த மீனம்பட்டியை சேர்ந்த சைமன் டேனியல் என்பவர் கடந்த 9ம் தேதி மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருத்தங்கள் பகுதியைச் சேர்ந்த வீரலட்சுமி (35) என்ற பெண் தொழிலாளியும் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது மேலும் அவரது சகோதரி கஸ்தூரி 33, உள்ளிட்ட 3 பேர் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.