நொய்யல் அருகே பணம் வைத்து தாயம் விளையாட்டு 5-பேர் கைது.ரூ 3310 பறிமுதல்.
நொய்யல் அருகே பணம் வைத்து தாயம் விளையாட்டு 5-பேர் கைது.ரூ 3310 பறிமுதல்.;
நொய்யல் அருகே பணம் வைத்து தாயம் விளையாட்டு 5-பேர் கைது.ரூ 3310 பறிமுதல். வேலாயுதம்பாளையம் காவல் எல்லை குட்பட்ட நொய்யல் பகுதியில் பணம் வைத்து தாயம் விளையாட்டு விளையாடுவதாக காவல் ஆய்வாளர் ஓம் பிரகாசுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் ஜூலை 13ஆம் தேதி மாலை 6:45 மணி அளவில் நொய்யல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். நொய்யல் ஆற்றுப்படுகையில் உள்ள முள் தோட்டத்தில் தாயம் விளையாட்டு விளையாடுவது கண்டறியப்பட்டு , இந்த விளையாட்டில் ஈடுபட்ட நொய்யல் குறுக்கு சாலையைச் சேர்ந்த செல்வக்குமார், அண்ணா நகரை சேர்ந்த ரவி, வேலாயுதம் பாளையத்தை சேர்ந்த நல்லசிவம் , பிகேஎஸ் நகரைச் சேர்ந்த ராமச்சந்திரன்,கொடுமுடி சோழங்கப்பாளையத்தை சேர்ந்த பூவரசன் ஆகிய 5 பேரையும் கைது செய்து தாயம் விளையாட பயன்படுத்திய 2- தாயக்கட்டை , ரூபாய் 3310 ஐ பறிமுதல் செய்தனர் . 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து காவல் நிலையப் பிணையில் விடுவித்தனர் வேலாயுதம்பாளையம் காவல் துறையினர்.