தமிழ் பல்கலைக்கழகத்தில் சித்திரைத் திருநாள் – 50 விழுக்காடு சிறப்புத் தள்ளுபடி விற்பனை
நூல் விற்பனை;

தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிப்புத்துறையில் சித்திரைத் திருநாளை முன்னிட்டு 2025 ஏப்ரல் 15ஆம் நாள் முதல் மே 14ஆம் நாள் வரை ஒரு மாதக் காலத்திற்குத் தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீட்டு நூல்கள் 50 விழுக்காடு சிறப்புத் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படவுள்ளன. அறிஞர் பெருமக்களும், மாணவர்களும், பொதுமக்களும் இவ்வரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகம் பதிப்புத்துறை விற்பனைப்பிரிவு, வாகை வளாகத்தில் நூல்கள் கிடைக்கும். மேலும், அலைபேசி எண்-9489102276 இல் தொடர்பு கொள்ளலாம் என பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.