தேவாலய நிர்வாகத்தை பற்றி அவதூறு பரப்புவதாக குற்றம் சாட்டி 50-க்கும் மேற்பட்டோர் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேவாலய நிர்வாகத்தை பற்றி அவதூறு பரப்புவதாக குற்றம் சாட்டி 50-க்கும் மேற்பட்டோர் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
ராஜபாளையத்தில் செயல்படும் தேவாலய மத போதகர் ஜான் கமலேசன் என்பவர், உறுப்பினர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தேவாலய நிர்வாகத்தை பற்றி அவதூறு பரப்புவதாக குற்றம் சாட்டி 50-க்கும் மேற்பட்டோர் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் காமராஜர் நகரில் செயல்படும் தூய பவுல் தேவாலயத்தில் 600 குடும்பங்களைச் சேர்ந்த 1200க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். ஜான் கமலேசன் என்பவர் மத போதகராக உள்ளார். இதற்கு முன் இருந்த மத போதகர் மாற்றத்தின் போது ஏற்பட்ட தகராறு காரணமாக ஜான் கமலேசனுக்கும் உறுப்பினர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. எனவே இவரை மாற்ற வேண்டும் என மதுரை பேராயருக்கு கிறிஸ்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் ஜான் கமலேசன், மற்றொரு கிளை தேவாலயத்தில் போதகராக உள்ள விஜயகுமார் என்பவரை தூண்டி விட்டு தேவாலயத்தை பற்றியும், தேவாலய நிர்வாகத்தை பற்றியும் வாட்ஸ் அப் மூலம் ஊழல் உள்ளிட்ட அவதூறு பரப்புவதாக உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். அவதூறு பரப்புவதை நிறுத்த வேண்டும் என இருவரிடமும் பலமுறை எச்சரித்தும் அவர்கள் தொடர்ந்து அவதூறு பரப்புவதாக குற்றம் சாட்டி, தேவாலய உறுப்பினர்கள் மற்றும் பெண்கள் என 50க்கும் மேற்பட்டோர் இன்று பகலில் ஜான் கமலேசன் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் கிறிஸ்தவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே சமாதான கூட்டம் மூலம் சமரசம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற காவல்துறை அதிகாரிகளின் உறுதியை ஏற்றுக் கொண்ட கிறிஸ்தவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். கிறிஸ்தவர்களின் இந்த போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.