கோவை: 50 ஜோடிகளுக்கு இலவச திருமணம் !
கோவையில் உள்ள உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 50 ஜோடிகளுக்கு திருமணம் சீர்வரிசைகளுடன் நடைபெற்றது.;
கோவையில் உள்ள உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், நேற்று இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 50 ஜோடிகளுக்கு திருமணம் சீர்வரிசைகளுடன் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு ஒரே நாளில் திருமணம் நடத்தப்பட்டதுடன், அரை பவுன் தாலி, கட்டில், பீரோ, மெத்தை உள்ளிட்ட சீர்வரிசைகளும் வழங்கப்பட்டன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமண தம்பதிகளை வாழ்த்தினார். சிரவை ஆதீனம், மாநகராட்சி துணைமேயர், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர். மணமக்கள், இது போன்ற சமூக நல முயற்சிக்கு நன்றி தெரிவித்தனர்.