எம்எல்ஏ உட்பட 50 பேர் மீது வழக்கு 

வெள்ளிச்சந்தை;

Update: 2025-07-31 05:20 GMT
குமரி கடலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் நேற்று வெள்ளிச்சந்தை அருகே முட்டம் கடற்கரை கிராமத்தில் மீன்பிடிக்க செல்லாமல், வள்ளங்களில் கருப்புக்கொடி கட்டி வேலை நிறுத்த போராட்டம் செய்தனர். பிரின்ஸ் எம்எல்ஏ போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினார். மற்றும் அருட்பணியாளர் டங்ஸ்டன், நெய்தல் மக்கள் இயக்க தலைவர் பெர்லின் உட்பட பலர்  பங்கேற்றனர். இதற்கிடையே  அரசு அனுமதி இன்றி அரசுக்கு  எதிராக கோஷங்கள் எழுப்பியதாகவும், அரசு கட்டளைக்கு அடி பணியாமல் பொது இடத்தில் தொல்லை செய்ததாகவும், பிரின்ஸ் எம்எல்ஏ உட்பட 50 பேர் மீது வெள்ளிச்சந்தை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Similar News