ராசிபுரம் அருகே 50 ஆண்டு பழமையான மரம் சாலையில் விழுந்ததால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு..

ராசிபுரம் அருகே 50 ஆண்டு பழமையான மரம் சாலையில் விழுந்ததால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு...

Update: 2024-10-08 13:31 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் - சென்னை சாலையில் மெட்டாலா ஆஞ்சநேயர் கோவில் மலை அடிவாரத்தில் உள்ளது. இந்த அடிவாரப் பகுதியில் ஏராளமான மரங்கள் உள்ளன. அதில், சுமார் 50 ஆண்டு வயதுடைய ஆயமரம் ஒன்று அதிகாலை சுமார் 5:30 மணியளவில் அடியோடு சாலையில் பெயர்ந்து விழுந்தது. அப்பகுதியாக வழியாகச் சென்றவர்கள் ராசிபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் விழுந்த மரத்தின் கிளைகளை இயந்திரம் மூலம் அறுத்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 2 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மண்ணில் ஈரப்பதம் அதிகளவில் இருக்கிறது. இந்நிலையில் காற்று சற்று அதிகமாக வீசியதால் மரம் அடியோடு பெயர்ந்து சாலையில் விழுந்துள்ளது.

Similar News