ஸ்ரீவில்லிபுத்தூரில் மதுவிலக்கு காவல்துறை சார்பாக போதை ஒழிப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு.*
ஸ்ரீவில்லிபுத்தூரில் மதுவிலக்கு காவல்துறை சார்பாக போதை ஒழிப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு.*;
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மதுவிலக்கு காவல்துறை சார்பாக போதை ஒழிப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு. தமிழக முழுவதும் மதுவிலக்கு காவல்துறை சார்பாக போதை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் மதுவிலக்கு காவல்துறை சார்பாக போதை விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்ட இந்த மனித சங்கிலி நிகழ்ச்சியில் போதைக்கு அடிமை ஆகாதே எதிர்காலத்தை தொலைக்காதே போதை நாட்டுக்கும் உயிருக்கும் கேடு உள்ளிட்ட பல்வேறு பதாகைகள் கையில் ஏந்தியவாறு விழிப்புணர்வு முழக்கங்களை மாணவர்கள் ஏற்படுத்தினர். இதில் மதுவிலக்கு காவல்துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.