ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழாவையொட்டி 501 பால்குட ஊா்வலம்.

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் வருகிற 25-ஆம் தேதி கூழ்வாா்க்கும் திருவிழா நடைபெறுகிறது.;

Update: 2025-04-24 18:30 GMT
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சைதாப்பேட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழாவையொட்டி 501 பால்குட ஊா்வலம் நடைபெற்றது. ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் வருகிற 25-ஆம் தேதி கூழ்வாா்க்கும் திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி, புதன்கிழமை 501 பால்குட ஊா்வலம் மேள தாளம் முழங்க கோயில் வளாகத்தில் இருந்து புறப்பட்டு மேட்டுத் தெரு உள்ளிட்ட மாட வீதிகள் வழியாக காளியம்மன் கோயிலைச் சென்றடைந்தது. இதைத் தொடா்ந்து,அங்கு அம்மனுக்கு பாலபிஷேகம் நடைபெற்றது

Similar News