சிவகாசியில் 51 ரூபாய்க்கு டி-சர்ட் மற்றும் சட்டை வழங்குவதாக அறிவித்த ஆஃபரால் குவிந்த மக்கள்....
சிவகாசியில் 51 ரூபாய்க்கு டி-சர்ட் மற்றும் சட்டை வழங்குவதாக அறிவித்த ஆஃபரால் குவிந்த மக்கள்....;
சிவகாசியில் 51 ரூபாய்க்கு டி-சர்ட் மற்றும் சட்டை வழங்குவதாக அறிவித்த ஆஃபரால் குவிந்த மக்கள்.... சிவகாசி அம்பேத்கர் சிலை அருகே உள்ள பிரபல ஆண்கள் ஆடையகத்தில் இன்று ஆடி தள்ளுபடி விற்பனை நிறைவு நாளை முன்னிட்டு 51 ரூபாய்க்கு ஒரு சட்டையும், டி-சர்ட்டும் தள்ளுபடி விலையில் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை கேள்விப்பட்ட இளைஞர்கள் மாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தள்ளுபடி விலையில் டி-சர்ட் மற்றும் சட்டையை வாங்க இளைஞர்கள், பெண்கள் என மக்கள் கூட்டம் கூடியதால் போக்குவரத்து நிறைந்த அப்பகுதி பரபரப்புக்குள்ளானது. இதனைத் தொடர்ந்து இரவு 9 மணியிலிருந்து அனைவருக்கும் 51 ரூபாய்க்கு டீசர்ட் மற்றும் சட்டை வழங்கப்பட்டது.