மூன்றரை வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 51

குமாரபாளையத்தில் மூன்றரை வயது பெண் குழந்தைக்கு 51 வயது நபர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.;

Update: 2025-06-22 12:33 GMT
குமாரபாளையம் அருகே ஓலப்பாளையம் பகுதியை சேர்ந்த தம்பதியரின் மூன்றரை வயது மகளை, அருகில் உள்ள பாட்டி வீட்டில் விட்டுவிட்டு சொந்த வேலையின் காரணமாக வெளியூர் சென்று விட்டனர். குழந்தை விளையாட வெளியில் வந்த போது, அருகே வசிக்கும் ஓட்டல் கடை சர்வர் கோவிந்தன், 51, என்பவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளதாக தெரிகிறது. குழந்தையின் பெற்றோர் குட் டச், பேட் டச் , குறித்து குழந்தைக்கு சொல்லி கொடுத்துள்ளனர். பாட்டி வந்ததும், குழந்தை நடந்த விபரங்கள் கூறியுள்ளது. இது குறித்து கோவிந்தன் வசம் கேட்க அவன் மழுப்பியுள்ளான். ஊருக்கு சென்ற தம்பதியர் திரும்பி வர, குமாரபாளையம் போலீசில் பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Similar News