உத்தனப்பள்ளி: 531 கிலோ குட்கா, மதுபாட்டில்கள் பறிமுதல்.

உத்தனப்பள்ளி: 531 கிலோ குட்கா, மதுபாட்டில்கள் பறிமுதல்.;

Update: 2025-04-18 01:50 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி போலீசார் நேற்று முன்தினம் மாலை ராயக்கோட்டை சாலையில் ரோந்து சென்றனர். அபப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் காருக்குள் 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 531 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. மேலும் 5 ஆயிரத்து 760 ரூபாய் மதிப்புள்ள கர்நாடக மாநில மது பாட்டில்கள் இருந்தன. விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் மைசூரு அருகே உள்ள நஞ்சன்குடியை சேர்ந்த ராஜேஷ் (26) என்பது என தெரிய வந்தது அதை யெடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 531 கிலோ குட்கா, மதுபாட்டில்கள் மற்றும் கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Similar News