தாயுமானவர் திட்டத்தில் அக்.5,6ல் ரேசன் பொருட்கள் விநியோகம் – ஆட்சியர் தகவல்

தாயுமானவர் திட்டத்தில் அக்.5,6ல் ரேசன் பொருட்கள் விநியோகம் – ஆட்சியர் தகவல்;

Update: 2025-10-04 11:57 GMT
தூத்துக்குடி மாவட்டத்தில் அக்.05 மற்றும் 06 ஆகிய நாட்களில் அக்டோபர் 2025 மாதத்திற்கான முதல்வரது தாயுமானவர் திட்டம் (பொதுவிநியோகத்திட்டம்) மூலம் ரேசன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளான 70 வயதிற்கு மேற்பட்ட வயதான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு அக்டோபர் 2025 மாதத்திற்கான அவர்களது குடிமைப்பொருட்கள் 05.10.2025 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 06.10.2025 (திங்கட்கிழமை) ஆகிய நாட்களில் அந்தந்தப் பகுதிகளுக்குரிய நியாயவிலைக்கடைகளின் விற்பனையாளர்கள் மூலம் அவர்களது வீட்டிற்கே சென்று விநியோகம் செய்யப்படும். இத்திட்ட பயனாளிகள் அனைவரும் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

Similar News