குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் 59 ஆம் ஆண்டு விழா

கல்லூரி ஆண்டு விழா;

Update: 2025-03-28 14:06 GMT
தஞ்சாவூர், குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கல்லூரியில் வியாழக்கிழமை முற்பகல் கல்லூரி நாள் விழாவும், பிற்பகல் விடுதி விழாவும் நடை பெற்றன. கல்லூரி நாள் விழாவில் சிறப்பு விருந்தினராக  லயன்ஸ் முன்னாள் ஆளுநர் செளமா ராஜரத்தினம்  சிறப்பு விருந்தினராகத் கலந்து சிறப்புரையாற்றினார்.  அவர் பேசுகையில், "மாணவிகள் சமுதாய அக்கறை கொண்டவர்களாக இருக்க வேண்டும். பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் மதிக்க வேண்டும். குறிக்கோளை நிர்ணயித்து அதனை நோக்கிப் பயணிக்க வேண்டும்" என்றார். கல்வியில் தனிச்சிறப்பு பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கல்லூரி மாணவிகள் மற்றும் பேராசிரியர்களுக்கு,  "அனைவருக்கும் ஆரோக்கியம்" என்ற நிலையில் புதன் தோறும் மருத்துவ முகாம் நடத்திய மருத்துவர் இராதிகா மைக்கேல், கல்லூரி வளாகத்தில் மியா வாக்கி குறுங்காடுகள் உருவாக துணை நின்ற செ.தமிழ்ச்செல்வன் ஆகியோருக்கு குந்தவை சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன. கல்லூரி முதல்வர் முனைவர். அ.ஜான் பீட்டர் தலைமை வகித்து, ஆண்டறிக்கை வாசித்தார். முனைவர் இரா.ரமாபிரியா வரவேற்றார். வி.கவிதா நன்றி கூறினார். சு.க.வெண்ணிலா தொகுத்து வழங்கினார். மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன பிற்பகல் நடைபெற்ற  விடுதி விழாவில் தஞ்சை துணை மேயர் மருத்துவர் அஞ்சுகம் பூபதி கலந்து கொண்டார். விடுதி துணைக் காப்பாளர் முனைவர். பெ.தங்கமதி  வரவேற்றார். துணைக் காப்பாளர் முனைவர்.க.ஹேமலதா விடுதி ஆண்டறிக்கையை  வாசித்தார். விடுதிச் செயலர் மாணவி இல.சுவேதா நன்றி கூறினார். நிகழ்ச்சித் தொகுப்பை மாணவி கோ.மனோரஞ்சிதம் வழங்கினார்.

Similar News