திருப்பூர் அருகே 6 மாத கன்றுகுட்டியை நாய்கள் கடித்து கொன்ற வீடியோ வைரல்!
திருப்பூர் அருகே 6 மாத கன்றுகுட்டியை நாய்கள் கடித்து கொன்ற வீடியோ வைரல். நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
திருப்பூர் அருகே 6 மாத கன்று குட்டியை நாய்கள் கடித்து கொன்ற வீடியோ வைரல். நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை. திருப்பூர் மாவட்டம் அழகுமலை அடுத்த ராமம்பாளையம் கிராமத்தில் யுவராஜ் (40) என்பவருக்கு சொந்தமான வயலில் இரவு மேய்ச்சலுக்கு மாடு மற்றும் கன்றுகளை கட்டி வைத்து விட்டு உறங்க சென்றுள்ளார். காலை ஆறு மணி அளவில் கன்று மற்றும் மாடுகளை பார்ப்பதற்காக இவர் தனது மகனுடன் சென்ற பொழுது நாய்கள் எதையோ கடித்து தின்று கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக தனது செல்போனில் இதனை வீடியோவாக பதிவு செய்து அருகில் சென்று நாய்களை விரட்டி விட்டு பார்த்த பொழுது ஆறு மாத கன்று குட்டி நாய்களால் கடித்து குதறி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அருகில் இருந்த விவசாயிகள் உதவியுடன் கன்று குட்டியை எடுத்து அடக்கம் செய்து கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் தெரிவித்தார். இப்பகுதியில் ஏராளமான நாய்கள் சுற்றித் திரிவதாகவும் தொடர்ந்து ஆடு மற்றும் கன்று குட்டிகளை நாய்கள் கடித்து வருவதால் பொதுமக்கள் அச்சமான சூழ்நிலையில் வசித்து வரவேண்டிய நிலை உள்ளதாகவும் குழந்தைகளை தனியே வெளியே அனுப்ப அச்சப்படும் நிலை உள்ளதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.