திருப்பூரில் யாருடைய விநாயகர் சிலை முன்னே செல்லும் என ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயம். சிறுவன் உட்பட 6 பேர் கைது.

திருப்பூரில் யாருடைய விநாயகர் சிலை முன்னே செல்லும் என ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயம், சிறுவன் உட்பட 6 பேர் கைது.;

Update: 2024-09-12 10:54 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பூர்: யாருடைய விநாயகர் முன்னே செல்லும் என ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயம் சிறுவன் உட்பட 6 பேர் கைது. இரு வேறு இடங்களில் நடைபெற்ற சம்பவங்களால் பரபரப்பு. திருப்பூர் மாநகரில் நேற்று இந்து முன்னணி சார்பில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் நடைபெற்றது. 600 சிலைகள் மாநகர் முழுவதும் இருந்து கொண்டு வரப்பட்டு சாமளாபுரம் குளத்தில் கரைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை மத்திய இணை அமைச்சர் எல் முருகன் துவக்கி வைத்தார்.  இதனிடையே யாருடைய விநாயகர் சிலை முன்னே செல்ல வேண்டும் என மோதல் எழுந்தது. முதலில் எம் எஸ் நகர் பகுதியில் இந்து முன்னணியைச் சேர்ந்த இரண்டு பிரிவினர் தங்களது விநாயகர் சிலை தான் முன்னே செல்ல வேண்டும் என மோதலில் ஈடுபட்டனர் காவல்துறையினர் பாதுகாப்பை மீறியும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக புகார் பதிவு பெறாத நிலையிலும் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து வடக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல இடுவம்பாளையம் பகுதி அருகே அதே பகுதியைச் சேர்ந்த தங்களது விநாயகர் சிலை தான் முன்னே செல்ல வேண்டும் என வாக்குவாதம் எழுந்தது. இதில் போயம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவரை இடுவம்பாளையம் பகுதியைச் சேர்ந்த நவீன் குமார் வெங்கடேஷ் தேவா ஸ்ரீதர் பாலாஜி என்ற ஐந்து பேர் சேர்ந்து தாக்கி கார் கண்ணாடியை உடைத்துள்ளனர். இதில் சத்தியமூர்த்தி தலையில் படுகாயம் அடைந்தார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த வீரபாண்டி போலீசார் சிறுவன் உட்பட 6 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News