நாமக்கல் அரசு அலுவலர் வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீள சாரை பாம்பு பிடிபட்டது!
நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் கார்த்திக் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி 6 அடி நீளமுள்ள சாரை பாம்பை பிடித்தனர்.
நாமக்கல்- மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் ஆலமரம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் இவர் நாமக்கல் தலைமை அஞ்சலகத்தில் பணியாற்றி வருகிறார்.இவர் புதிதாக வீடு கட்டி வருகிறார், இந்நிலையில் புதிதாக கட்டி வரும் வீட்டிற்குள் 6 அடி நீள சாரை பாம்பு புகுந்தது. இதனை கண்டதும் நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் கார்த்திக் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி 6 அடி நீளமுள்ள சாரை பாம்பை பிடித்து லத்துவாடி அருகில் உள்ள காப்பு காட்டில் விட்டனர்.இதனால் அந்த குடியிருப்பு பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.