குமரகோட்டம் முருகன் கோவிலில் 6 ஜோடிகளுக்கு சீர்வரிசை வழங்கல்
குமர கோட்டம் முருகன் கோவிலில் 6 ஜோடிகளுக்கு திருமண விழா அமைச்சர் பங்கேற்பு;
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள குமரகோட்டம் என அழைக்கப்படும் சுப்பிரமணிய சுவாமி கோவில், ஹிந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில், நேற்று காலை ஆறு ஜோடிகளுக்கு இலவச திருமணங்கள் நடந்தன. இந்த மணமக்களுக்கு, தலா நான்கு கிராம் தங்கம் மற்றும் 60,000 ரூபாய் மதிப்பிலான திருமண சீர்வரிசை பொருட்களை கைத்தறி மற்றும் துணிநுால் துறை அமைச்சர் காந்தி வழங்கினார்.இதில், ஹிந்து அறநிலைய துறை இணை ஆணையர் குமரதுரை மற்றும் காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.