ராமநாதபுரம் திமிங்கலத்தின் உமிழ் நீர் கடத்திய 6 பேர் கைது
ராமநாதபுரம் அருகே திமிங்கலத்தின் உமிழ் நீர் கடத்தியதாக சொகுசு கார் உட்பட 6 கைது செய்யப்பட்டுள்ளனர்;
ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக நடைபெறும் கடத்தல்கள் குறித்து தீவிர நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல்துறையினருக்கு ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவிட்டிருந்தார்கள். இந்நிலையில், ஆய்வு மேற்கொண்டு வந்த போது சில நபர்கள் சட்டவிரோதமாக திமிங்கலத்தின் உமிழ்நீரை கடத்த உள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் மேலக்கோட்டை விலக்கு சாலை அருகே கேணிக்கரை சார்பு ஆய்வாளர் தலைமையில், காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த TN 59 CM 1339 Maruthi Swift Desire வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது, காரில் இருந்து தப்பி ஓட முயன்ற நபர்களை பிடித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. காரில் இருந்த நபர்களை பற்றி விசாரணை செய்ததில் ராஜன் த/பெ தங்கராஜ், சிங்கராயன் காலணி மதுரை, ஜெயகுமார் த/பெ விஜயேந்திரன், T.ரெங்கநாதபுரம், தேவாரம், தேனி மாவட்டம், ஜெகதீஸ் சந்திரபோஸ் த/பெ பூபதி, நேருநகர் (இ) பட்டிணம்காத்ததான், ராமநாதபுரம், சாகுல் ஹமீது ரசிலாக்கான், த/பெ ஹாஜாமுகைதீன் பள்ளிவாசல்தெரு, சாத்தான்குளம், சுபாஷ்பாபு, த/பெ நாகரெத்தினம், வீரவனூர், பரமக்குடி, ராஜலிங்கம், த/பெ குணசேகரன், MSK நகர், இராமநாதபுரம் ஆகியோர்கள் என தெரியவந்தது. பின்னர் மேற்படி காரில் இருந்த சுபாஷ்பாபு மற்றும் ராஜன் ஆகியோரிடமிருந்து சுமார் 4 கிலோ எடையுள்ள திமிங்கலத்தின் உமிழ்நீர் (மதிப்பு ரூ.4 கோடி) கைப்பற்றப்பட்டது. மேற்படி திமிங்கலத்தின் உமிழ்நீரானது அரசால் தடைசெய்யப்பட்டது என்பதால், மேற்படி நபர்கள் மற்றும் திமிங்கலத்தின் உமிழ்நீர், (AMBERGRIS), அவர்கள் பயன்படுத்திய வாகனம் மற்றும் செல்போன்கள் ராமநாதபுரம் வனத்துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடர்பாக, வனத்துறையினர் WLOR-1/25 U/S 2(32) r/w 39(1)(b), 39(1)(d), 39(1), (d)(s)40, 42, 43, 44, 49, 498, 50, 51(1)WLP Act -ன்படி வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுபோன்று சட்டவிரோமாக கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.