கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்பொழுது நாளுக்கு நாள் விபத்துகள் அதிகரித்து வருகிறது விபத்தை குறைப்பதற்காக போலீஸ் அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர் மார்த்தாண்டம் பகுதியில் தற்பொழுது நீண்ட நாட்களுக்கு பிறகு தேசிய நெடுஞ்சாலை தார் போடப்பட்டுள்ளது இதனால் வாகனங்களின் வேகம் அதிகரித்து உள்ளது இந்த நிலையில் மார்த்தாண்டம் டிராபிக் சப் இன்ஸ்பெக்டர் செல்லசாமி தலைமையில் களியக்காவிளை, படந்தாலுமூடு, மார்த்தாண்டம் மேம்பாலம் இறங்கும் பகுதி, பம்மம், சாங்கை, குழித்துறை ஆகிய 6 இடங்களில் விபத்து பகுதி எச்சரிக்கை பிலிங்கிங் லைட் பொருத்தப்பட்டுள்ளது இது இரவு வேளையில் வாகனங்கள் மெதுவாக செல்ல எச்சரிக்கையாக அமையும்.