கோவை: மாணவர் அடித்து துன்புறுத்தல்- 6 மாணவர்கள் கைது !

கல்லூரி விடுதியில் வைத்து சீனியர் மாணவனை தாக்கிய ஜூனியர் மாணவர்கள் 6 பேர் கைது.;

Update: 2025-03-25 01:42 GMT
கோவை, பாலக்காடு சாலையில் உள்ள நேரு தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் சீனியர் மாணவர் ஒருவரை விடுதியில் வைத்து கொடூரமாக தாக்கியுள்ளனர். கல்லூரி விடுதியில், முதலாம் ஆண்டு மாணவர்கள் சீனியர் மாணவர் ஒருவரை இரவு முழுவதும் விடுதியில் வைத்து கொடூரமாக தாக்கி உள்ளனர். பணத்தை எடுத்ததாக குற்றம் சாட்டி சீனியர் மாணவரை மண்டியிட வைத்து, கைகளை உயர்த்த சொல்லி கொடுமைப்படுத்தியுள்ளனர். சீனியர் மாணவர் இரத்தக் காயங்களுடன் வலியால் கதறியும், ஜூனியர் மாணவர்கள் தாக்குதலை நிறுத்தாமல் தொடர்ந்து அடித்து உள்ளனர். இந்த தாக்குதலின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் கல்லூரி நிர்வாகம் 13 மாணவர்களையும் இடைநீக்கம் செய்து காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தது. இந்நிலையில் நேற்று கே.ஜி சாவடி காவல் துறையினர், 18 வயதான இரண்டு மாணவர்களையும், 17 வயதான 4 மாணவர்களையும் கைது செய்துள்ளனர். இவர்கள் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்படுவார்கள் என்று தெரிகிறது.

Similar News