நீலகிரி மாவட்ட மக்களுக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்.

ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்;

Update: 2025-04-06 14:57 GMT
நீலகிரி மாவட்ட மக்களுக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்....... நீலகிரி மாவட்டத்தில், சொந்தமாக வீடு இல்லாத ஏழை, எளிய மக்களுக்காக கூடலூரில் 26 கோடியே 6 லட்சம் ரூபாய் செலவில் 300 வீடுகள் கொண்ட புதிய கலைஞர் நகர் அமைக்கப்படும்! இரண்டாவது அறிவிப்பு பழங்குடி மக்கள் நிறைந்து வாழுகின்ற உங்கள் மாவட்டத்தில், அவர்கள் வாழ்வியலை எல்லோரும் தெரிந்து கொள்கின்ற வகையில் காட்சிப்படுத்தவும், அதுபற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும், 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் “பழங்குடியினர் அருங்காட்சியகம் மற்றும் ஆராய்ச்சி மையம்” அமைக்கப்படும்! மூன்றாவது அறிவிப்பு நீலகிரி மாவட்டம் முழுக்க இருக்கின்ற இயற்கை அழகை சுற்றுலாப் பயணிகள் கண்டு களிக்கின்ற வகையில், "எங்கும் ஏறலாம் எங்கும் இறங்கலாம்” எனும் 'ஹாப் ஆன் ஹாப் ஹாஃப்' சுற்றுலா முறை, 5 கோடி ரூபாய் செலவில், 10 புதிய பேருந்துகளுடன் தொடங்கப்படும்! மிக முக்கியமான நான்காவது அறிவிப்பு ஊட்டியில் சுற்றுலா காலங்களில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு, 20 கோடி ரூபாய் செலவில் ‘மல்ட்டி லெவல் கார் பார்க்கிங்' வசதி அமைக்கப்படும்! ஐந்தாவது அறிவிப்பு நடுகாணி “மரபணுத் தொகுதி சூழலியல் இயற்கைச் சுற்றுலா மையம்” 3 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்! ஆறாவது அறிவிப்பு பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளில், 5 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில், 23 சமுதாயக் கூடங்களும், நகர்ப்புறப் பகுதிகளில் வாழுகின்ற பழங்குடியினருக்கு, 10 கோடி ரூபாய் செலவில் 200 வீடுகளும் கட்டித் தரப்படும்!

Similar News