வெள்ளகோவில் பகுதியில் சூதாடிய 6 பேர் கைது
வெள்ளகோவில் பகுதியில் சூதாடிய 6 பேர் கைது செய்து பணம் பறிமுதல்;
வெள்ளகோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எம். சந்திரன் நேற்று வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வெள்ளகோவில் வள்ளியரச்சல் சாலை திருவள்ளுவர் நகரில் ஒதுக்குப்புறமான இடத்தில் சூதாட்டம் நடந்தது தெரியவந்தது. அங்கு பணம் வைத்து சூதாடிய அதே நகரை சேர்ந்த கே. கண்ணுச்சாமி (வயது 58), ஆர்.செந்தில் (57) கே.ஆறுமுகம் (78) காமராஜபுரம் கே.மனோகரன் (65), புதுப்பை தங்கமேடு ஆர்.வெங்கடாசலம் (50), திருப்பூர் எஸ்.பி.காலனி கிருஷ்ணமூர்த்தி (50) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1,850 பறிமுதல் செய்யப்பட்டது.