காமக்காப்பட்டியில் சிக்னல் ஏதும் வெளிப்படுத்தாமல் நிறுத்திய லாரியின் மீது கார் மோதி விபத்து. இளைஞர் உயிரிழப்பு. 6 பேர் படுகாயம்.

காமக்காப்பட்டியில் சிக்னல் ஏதும் வெளிப்படுத்தாமல் நிறுத்திய லாரியின் மீது கார் மோதி விபத்து. இளைஞர் உயிரிழப்பு. 6 பேர் படுகாயம்.;

Update: 2025-05-16 13:26 GMT
காமக்காப்பட்டியில் சிக்னல் ஏதும் வெளிப்படுத்தாமல் நிறுத்திய லாரியின் மீது கார் மோதி விபத்து. இளைஞர் உயிரிழப்பு. 6 பேர் படுகாயம். சேலம் மாவட்டம், ஓமலூர், முத்துநாயக்கன்பட்டி அருகே பெருமாச்சூர் ரயில்வே கேட் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா மகள் கலையரசி வயது 26. இவரது சகோதரர் கவியரசன்.( கார் டிரைவர்) இவர்களது பொலிரோ காரில் சேலம் கொண்டாம்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணியம் மனைவி லதா வயது 32, இவரது மகன் யோகரிஷி வயது 10, மகள் லத்திகா ஸ்ரீ வயது 5, மற்றும் முத்து நாயக்கன்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் மகள் கனிஷ்கா வயது 12, மகன் பூவரசன் வயது 14 மற்றும் ராஜாவின் மனைவி மல்லிகா வயது 51, குமார் மகன் சிவகுமார் வயது 23 ஆகியோர் மே 15 ஆம் தேதி இரவு 1:40 மணி அளவில், மதுரை - சேலம் சாலையில் சென்று கொண்டிருந்தனர். இவர்களது கார் காமகாபட்டி அருகே வந்தபோது, கரூரை அடுத்த நெரூர் வடபாகம் பகுதியைச் சேர்ந்த அன்பழகன் வயது 50 என்பவர் அவரது டாரஸ் லாரியை எவ்வித சிக்னலும் வெளிப்படுத்தாமல் நிறுத்தி இருந்துள்ளார். அப்போது கவியரசன் ஓட்டிய பொலிரோ கார் டாரஸ் லாரியின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிவகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் லதா, யோகஸ்ரீ, லத்திகா ஸ்ரீ, பூவரசன், கனிஷ்கா,மல்லிகா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரையும் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து கலையரசி அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த சிவக்குமாரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக லாரி டிரைவர் அன்பழகன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் அரவக்குறிச்சி காவல் துறையினர்

Similar News