வேப்பனப்பள்ளி: அனுமதியின்றி எருது விடும் விழா நடத்திய 6 பேர் மீது வழக்கு

வேப்பனப்பள்ளி:அனுமதியின்றி எருது விடும் விழா நடத்திய 6 பேர் மீது வழக்கு;

Update: 2025-05-20 01:54 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகேயுள்ள வி.மாதேப்பள்ளி கூட்டு ரோடு அருகே அரசு அனுமதி இன்றி நேற்று எருது விடும் விழா நடந்தது. இதுகுறித்து வருவாய்த்துறையினர் வேப்பனப்பள்ளி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் அனுமதி இன்றி எருது விடும் விழா நடத்தியதாக இதே பகுதியை சேர்ந்த ராமசாமி உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைமேற்கண்டு வருகின்றனர்.

Similar News