குற்றாலம் அருவிகளில் வெள்ளம் -6வது நாளாக குளிக்க தடை

அருவிகளில் வெள்ளம் -6வது நாளாக குளிக்க தடை;

Update: 2025-05-30 06:30 GMT
தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையினால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொண்டுகிறது. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்தில் குவிந்து இரவும் பகலுமாக குளித்து வந்தனர். இந்நிலையில் குற்றாலத்தில் பெய்து வரும் தொடர் சாரல் மழையினால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த ஐந்து நாட்களாக அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இன்றும் வெள்ளப்பெருக்கு குறையாததால் இன்று ஆறாவது நாளாக தடை நீடிக்கப்பட்டுள்ளது.

Similar News