அரவக்குறிச்சி ரூ 6 லட்சம் மதிப்புள்ள போலி சிகரெட் பறிமுதல். ஒருவர் கைது.
அரவக்குறிச்சி ரூ 6 லட்சம் மதிப்புள்ள போலி சிகரெட் பறிமுதல். ஒருவர் கைது.;
அரவக்குறிச்சி ரூ 6 லட்சம் மதிப்புள்ள போலி சிகரெட் பறிமுதல். ஒருவர் கைது. ஐடிசி சிகரெட் கம்பெனியின் பிராண்டுகளை அரவக்குறிச்சியில் போலியாக தயாரித்து விற்பனை செய்வதாக கரூர் திண்டுக்கல் தேனி மாவட்டங்களுக்கு உட்பட்ட அறிவுசார் சொத்துரிமை அமலாக்க பிரிவு அதிகாரி முருகன் அளித்த புகார் படி ஆய்வாளர் ஜெபிலா தலைமையில் குழு அமைப்பு கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் நேற்று முன் தினம் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை ஐடிசி சிகரெட் கம்பெனியின் பிராண்டுகளை போலியாக தயாரித்து விற்பனை செய்வது தொடர்பாக அரவக்குறிச்சி பெரிய கடை வீதியைச் சேர்ந்த அபுதாஹிர் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், அவரிடமிருந்து கோல்டு பிளாக்,ஹனி டியூ , லைட்ஸ் ,கிங்ஸ் என 2180 பாக்கெட்களும், ஃபில்டர்,ஹனி டியூ 3100 பாக்கெட்டுகளும் எனமொத்தம் 6,80,000- மதிப்பிலான சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.