காங்கேயத்தில் பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது.
காங்கேயத்தில் பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது. ரூ1 லட்சத்து 7 ஆயிரத்து 170-ஐ போலீசார் பறி முதல் செய்தனர்;
காங்கேயம் அருகே கணபதிபாளையத்தில் பணம் வைத்து சிலர் சூதாடுவதாக காங்கேயம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை பிடித்து வந்து விசாரித்தனர். இதில் அவர்கள் காங்கயத்தை சேர்ந்த கவின் (வயது 26), ஈரோடு ரங்கம்பாளையத்தை சேர்ந்த ரமேஷ் குமார்(42), ஈரோடு சேனாபதிபாளையத்தை சேர்ந்த சிவக் குமார் (40), பொங்கலூரை சேர்ந்த பாலு (62), பல்லடத்தை சேர்ந்த சேகர்(54) மற்றும் திருப்பூரை சேர்ந்த செந்தில் (57) என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்து ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 170-ஐ போலீசார் பறி முதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.