கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு 6வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் !

போலி மின்னஞ்சல் அனுப்பியவர்களை கண்டறிய போலீசார் விசாரணை.;

Update: 2025-09-24 07:16 GMT
கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இது கடந்த சில மாதங்களில் 6வது முறை. நேற்று வந்த மிரட்டலில் மதியம் 12.10 மணிக்கு குண்டு வெடிக்கும் என கூறப்பட்டதால், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய், மெட்டல் டிடெக்டர் உதவியுடன் முழு வளாகமும் போலீசார் தீவிரமாக சோதனை செய்தனர். எந்த வெடிகுண்டும் இல்லை என உறுதி செய்யப்பட்டது. இதேபோல், கோவை ரேஸ்கோர்சில் உள்ள விமானப்படை நிர்வாகவியல் கல்லூரிக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அங்கும் சோதனையில் வெடிகுண்டு ஏதும் இல்லை. பாஸ்போர்ட் அலுவலகம், நீதிமன்றம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு முந்தைய முறைகளிலும் போலி மின்னஞ்சல் மிரட்டல்கள் வந்துள்ளன. போலி மின்னஞ்சல் முகவரிகளில் இருந்து அனுப்புபவர்களை கண்டறிய போலீசார் தொழில்நுட்ப உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Similar News