குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு.6-வது நாளாக நீடிக்கும் தடை
குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு.6-வது நாளாக நீடிக்கும் தடை;
தென்காசி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதன் தாக்கமாக குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அனைத்து அருவிகளிலும் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, குற்றாலம் மெயின் அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தின் காரணமாக அருவிப் பகுதிகளில் இருந்து வெளிநோக்கி பாயும் நீர் குற்றாலநாதர் கோவிலிலும், அதனை ஒட்டியுள்ள சாலைகளிலும் மழைநீர் பாய்ந்து ஓடி வருகிறது. இரவு நேரங்களில் நீண்ட நேரம் பெய்த மழையால், தென்காசி மாவட்டத்தின் பெரும்பாலான நீர்நிலைகள், ஆறுகள் மற்றும் அருவிகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது. இதனால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி , பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து முக்கிய நீர்வீழ்ச்சிகளிலும் கடந்த 6 நாட்களாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை தற்போதும் தொடர்கிறது.