டிசம்பர் 6 அம்பேத்கர் நினைவு நாளை ஒட்டி ராசிபுரம் நான்காவது பகுதியில் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்ற இஸ்லாமியர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி
டிசம்பர் 6 அம்பேத்கர் நினைவு நாளை ஒட்டி ராசிபுரம் நான்காவது பகுதியில் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்ற இஸ்லாமியர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்..;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் டிசம்பர் 6 அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை அடுத்து நான்காவது வார்டு பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தி தலித் மற்றும் இஸ்லாமிய ஒற்றுமை எழுச்சி நாளாக உறுதி மொழி ஏற்று வீரவணக்கம் செலுத்தினர். நாமக்கல் கிழக்கு மாவட்ட இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட துணை அமைப்பாளரும் ராசிபுரம் நகர்மன்ற உறுப்பினருமான பழனிசாமி அவர்கள் தலைமையில் நகர செயலாளர் சுகுவளவன் அனைவரையும் வரவேற்றார். மேலும் நகர துணை செயலாளர் கேசவன், தொகுதி செயலாளர் கண்ணன், வேலு, சதீஷ் ,விஜய் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில் வீரவணக்கம் செலுத்தினர். இதில் சிறப்பு அழைப்பாளராக நாமக்கல் சேலம் மண்டல துணை செயலாளர் அரசன் ,நாமக்கல் நாடாளுமன்ற துணை செயலாளர் கபிலன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொறுப்பாளர் ஜி.கே.சேகர், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்..