விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து ஒருவர் பலி - 6 பேர் காயம் 10க்கும் மேற்பட்ட அறைகள் சேதம் ...*

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து ஒருவர் பலி - 6 பேர் காயம் 10க்கும் மேற்பட்ட அறைகள் சேதம் ...*;

Update: 2025-02-05 13:26 GMT
விருதுநகர் அருகே கோவில் புலி குத்தியில் மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான சத்யபிரபு பட்டாசு ஆலை நாக்பூர் லைசென்ஸில் இயங்கி வருகிறது.. இந்நிலையில் இன்று மதியம் வழக்கமான பட்டாசு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது பேன்சி ரக பட்டாசு தயாரிக்கும் பணியில் எதிர்பாராத விதமாக பயங்கர சத்தத்துடன் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதை அடுத்து உடனே அருகில் இருந்தவர்கள் வச்சகாரப்பட்டி காவல் துறையினருக்கும், தீயணைப்பு துறையினக்கு தகவல் அளித்ததன் பேரில் , உடனடியாக சம்பவ இடத்திற்கு விருதுநகர், சாத்தூர், சிவகாசி ஆகிய ஊர்களிலிருந்து 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணி நடைபெற்றது பட்டாசுகள் தொடர்ந்து வெடித்ததால் அரை மணி நேரத்திற்கு மேலாக தீயை அணைக்கும் பணியை தொடங்காமல் தீயணைப்புத் துறையினர் காத்திருக்க வேண்டிய நிலையில் ஏற்பட்டது அதை தொடர்ந்து ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு தீ அணைத்து கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது மேலும் இந்த பட்டாசு வெடிவிபத்தில் 10க்கும் மேற்பட்ட அறைகள் முற்றிலும் சேதமடைந்தன. இந்த விபத்தில் ஒரு ஆண் உட்பட 6 பேர் காயமடைந்தனர் காயமடைந்தவர்கள் விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அது தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் கட்டிட ஈடுபாடுகளை அகற்றும் பணியை ஜேசிபி இயந்திரம் மூலம் மேற்கொண்டனர் அப்பொழுது கட்டிட இடுப்பாடுகளுக்குள் தீக்காயங்களுடன் இழந்த நிலையில் பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது அந்த பெண் பட்டாசாலையில் பரிபுரிந்த வதுவார் வட்டியைச் சார்ந்த ராமலட்சுமி வயது 50 என்பதும் தெரிய வந்தது இந்த பட்டாசு ஆலை விபத்தில் ஒருவர் உயிர் இறந்தார் மேலும் காயம் அடைந்த ஆறு நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் மேலும் இந்த விபத்து குறித்து வச்சக்காரப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Similar News