வாணியம்பாடி அருகே அரசு பள்ளியில் திறக்கப்பட்டு 6 மாதகாலத்திலேயே வகுப்பறை மேல்தளப்பூச்சி பெயர்ந்து விழுந்து 3

அரவிந்தன் (7904911077) திருப்பத்தூர் மாவட்டம். (04.03.2025) வாணியம்பாடி அருகே அரசு பள்ளியில் திறக்கப்பட்டு 6 மாதகாலத்திலேயே வகுப்பறை மேல்தளப்பூச்சி பெயர்ந்து விழுந்து 3 பள்ளி மாணவர்கள் படுகாயம்*;

Update: 2025-03-05 05:26 GMT
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே அரசு பள்ளியில் திறக்கப்பட்டு 6 மாதகாலத்திலேயே வகுப்பறை மேல்தளப்பூச்சி பெயர்ந்து விழுந்து 3 பள்ளி மாணவர்கள் படுகாயம்அம்பலூர் காவல்துறையினர் விசாரணை* திருப்பத்தூர் மாவட்டம்வாணியம்பாடி அடுத்த சங்கராபுரம் பகுதியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் உள்ள கடந்த 2023 -2024 ஆம் நிதியாண்டில், ஊரக வளர்ச்சி மற்றும், உள்ளாட்சித்துறை சார்பில், சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூபாய் 21 லட்சம் மதிப்பில் இரண்டு புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டு, கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதியில், வகுப்பறைகள் திறக்கப்பட்ட நிலையில், இந்த வகுப்பறையில், 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை 33 மாணவர்கள் பயின்று வரும் நிலையில், இன்று வகுப்பறையில் மாணவர்கள் பாடம் பயின்றுக்கொண்டிருந்த போது வகுப்பறையின் மேல்தளப்பூச்சி திடீரென பெயர்ந்து விழுந்ததில், வகுப்பறையில் அமர்ந்து பாடம் படித்துக்கொண்டிருந்த ஒன்றாம் வகுப்பு மாணவன் பிரனீத், 3 ஆம் வகுப்பு சுதர்சன் மற்றும் 3 ஆம் வகுப்பு மாணவன் விஷேக் ஆகியோர் மீது சிமென்ட் பூச்சி விழுந்த நிலையில், மூன்று மாணவர்களும் படுகாயமடைந்த உடனடியாக ஆசிரியர்கள் மற்றும் அப்பகுதிமக்கள் மாணவர்களை மீட்டு சிகிச்சையிற்காக, வாணியம்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் விபத்து ஏற்பட்ட பள்ளியில் வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையிலான காவல்துறையினர் மற்றும் வருவாய்துறையினர் நேரில் விசாரணை மேற்க்கொண்டனர் அதனை தொடர்ந்து நாட்றம்பள்ளி வட்டார கல்வி அலுவலர் சரவணன் ஆய்வு செய்து பள்ளி தற்போது விடுமுறை விடுமுறை விடப்பட்டது பொறியாளர் குழு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்த பின் இந்த கட்டிடத்தில் மாணவர்களை அமர வைக்கப்படும் என தெரிவித்தார் இந்தக் கட்டிடத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்படுத்தக்கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளார்.. மேலும் திறந்த ஆறுமாத காலமே ஆன நிலையில், வகுப்பறை கட்டிட மேல்தளப்பூச்சி இடிந்து விழுந்து, 3 மாணவர்கள் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

Similar News