தக்கலை : 6, 9ம் வகுப்பு மாணவிகளை கடத்தி சீரழித்த வழக்கறிஞர்
போக்சோவில் கைது;

குமரி மாவட்டம் தக்கலை அருகே சகோதரிகளான பள்ளி மாணவிகள் கடந்த 4-நாட்களுக்கு முன் வீட்டில் இருந்து மாயமானார்கள். இது தொடர்பான புகாரின் பேரில் போலீசாரின் தேடுதலுக்குப்பின் அதிரடியாக மாணவிகள் நேற்று முன்தினம் மீட்கப்பட்டனர். மாணவிகளை கடத்திச் சென்ற வழக்கறிஞர் அஜித் குமார் தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. இவருடைய தகப்பனார் A.P. ராஜன் வழக்கறிஞராகவும் சிவ சேனா கட்சி நிர்வாகியாகவும் உள்ளார். சம்பவத்தன்று இரவு தக்கலை பகுதியில் சைக்கிளில் சுற்றி திரிந்த மாணவிகளை மிரட்டி பைக்கில் கடத்தி அலுவலகத்தில் அடைத்து வைத்து சிதைத்ததாக கூறப்படுகிறது. வழக்கறிஞரான அஜித் குமாரை தக்கலை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து சிறுமிகளை மீட்டு உள்ளனர். நேற்று அஜித்குமாருக்கு திருமணம் நடைபெறுவதாக இருந்த நிலையில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டதால் திருமணம் நின்று போனதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.