தருமபுரம் ஆதீனதாதின் மணிவிழாவை முன்னிட்டு 60 பானைகளில் பொங்கல்

தருமபுரம் ஆதீனகர்த்தரின் 60-வது ஆண்டு மணிவிழாவை முன்னிட்டு தருமபுரம் ஆதீன தொடக்கப்பள்ளி சார்பில் 60 பானைகளில் பொங்கலிட்டு 60 இலைகளில் படையல் இட்டு சிறப்பு வழிபாடு

Update: 2025-01-13 11:21 GMT
தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானத்தின் 60-ஆம் ஆண்டு மணிவிழாவினை முன்னிட்டு தருமபுரம் ஆதீன தொடக்கப் பள்ளியில் இன்று நடைபெற்ற பொங்கல் விழாவில் 60 பானைகளில் பொங்கல் வைத்து, 60 இலைகளில் படையல் இடப்பட்டது. இதில் தருமபுரம் ஆதீனகர்த்தர் கலந்துகொண்டு, மகாதீப ஆராதனை காட்டி வழிபாடு மேற்கொண்டார். தொடர்ந்து அவர், பசு, யானை, குதிரை மற்றும் ஆட்டுக்கு முறையே கோபூஜை, கஜ பூஜை, அசுவ பூஜை மற்றும் அஜபூஜை ஆகிய பூஜைகளை செய்தார். தொடர்ந்து அவர் பள்ளி மாணவர்கள் 600 க்கு மேற்பட்டவர்களுக்கு கரும்பினை வழங்கி அருளாசி கூறினார். இந்த நிகழ்வில் ஆதீன கட்டளை தம்பிரான் சுவாமிகள், தருமபுரம் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். சிறுவர் சிறுமிகள் கையில் ஆளுக்கொடு கரும்பபைஏ|ந்தியவாறு வீட்டிற்கு விடைபெற்று சென்றனர்.

Similar News