கோவை: போலி ஆவண வழக்கு- 60 லட்சம் நில மோசடி – ஒருவர் கைது
கோவை மாவட்டதில் போலி ஆவணங்கள் மூலம் 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலத்தை மோசடி செய்த வழக்கில், ஈச்சனாரியைச் சேர்ந்த கார்த்திகேயன் நேற்று கைது செய்யப்பட்டார்.;
கோவை மாவட்டதில் போலி ஆவணங்கள் மூலம் 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலத்தை மோசடி செய்த வழக்கில், ஈச்சனாரியைச் சேர்ந்த கார்த்திகேயன் நேற்று கைது செய்யப்பட்டார். சுந்தராபுரத்தைச் சேர்ந்த மரகதம், தனது இரண்டாவது கணவர் சண்முகத்துடன் 1998ல் வாங்கிய 8.5 சென்ட் நிலம், போலி ஆவணங்கள் மூலம் வேறொருவருக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அவர், கோவை மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்ததையடுத்து, போலீசார் விசாரணை செய்து கார்த்திகேயனை கைது செய்தனர். மேலும், தொடர்புடைய மூவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.