போதிய ஆசிரியர்கள் இல்லாததால் கல்வி கற்க முடியவில்லை என நிர்வாகத்திடம் முறையிட்டதிற்க்கு 60க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளை வெளியேற்றிய கல்லூரி நிர்வாகம்..
போதிய ஆசிரியர்கள் இல்லாததால் கல்வி கற்க முடியவில்லை என நிர்வாகத்திடம் முறையிட்டதிற்க்கு 60க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளை வெளியேற்றிய கல்லூரி நிர்வாகம்.. மாணவ மாணவிகள் வாயில் முன்பு உட்கார்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்..*;
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விபிஎம் பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள் தங்களுக்கு போதிய ஆசிரியர்கள் இல்லாததால் கல்வி கற்க முடியவில்லை என நிர்வாகத்திடம் முறையிட்டதிற்க்கு 60க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளை வெளியேற்றிய கல்லூரி நிர்வாகம்.. மாணவ மாணவிகள் வாயில் முன்பு உட்கார்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் பகுதியில் விபிஎம் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியில் 83 மாணவர்கள் பொறியியல் பாடப்பிரிவில் பயின்று வருகின்றனர்.இந்த கல்லூரியில் பயிலும் பொறியியல் மாணவ மனைவிகளுக்கு கல்வி கற்றுத்தர போதிய ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்கள் 2 ஆண்டுகளாக கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் வருடம் தோறும் மாணவர்களின் படிப்பு தொகையை மட்டும் வாங்கிக்கொள்வதாகவும் மாணவர்களை தகாத வார்த்தைகளால் கல்லூரி தாளாளர் பேசுவதாகவும் மாணவிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் கல்லூரியில் பொறியியல் படிப்பிற்கான வசதிகளையும் செய்து கொடுக்கவில்லை என புகார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் நேற்று மாணவ மாணவிகள் கல்லூரி வளாகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இன்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ மாணவிகளை கல்லூரி நிர்வாகம் கல்லூரிக்குள் விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி இன்று முதல் 10 நாட்களுக்கு பொறியியல் மாணவர்களுக்கு விடுமுறை அளித்துள்ளதாக கல்லூரி நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டதாக மாணவ மாணவிகள் தெரிவிக்கின்றனர். மேலும் கல்லூரி வாயில் வெளிப்புறத்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தனியார் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கும் கல்லூரி நிர்வாகத்திற்கும் இடையே அசாராதன சூழ்நிலை நிலவி வருவதால் காவல்துறையும், மாவட்ட நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காத்துவருகிறது மேலும் உயர் கல்வித்துறை உறங்குகிறதா என்ற கேள்வியும் பணத்தைக் கட்டி கல்வி பயிலும் மாணவ மாணவிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது என பொதுமக்களிடையே கேள்வி எழுந்துள்ளது. இந்த விபிஎம் கல்லூரியில் அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மாணவ மாணவிகளின் கல்வித்தரத்தை பாதுகாத்து உயர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.