நல்லப்ப சுவாமிகள் 61வது நினைவு குருபூஜை விழா!
விளாத்திகுளத்தில் நல்லப்ப சுவாமிகள் 61வது நினைவு குருபூஜை விழாவை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் இசைக் கச்சேரி நடைபெற்றது.;
விளாத்திகுளத்தில் நல்லப்ப சுவாமிகள் 61வது நினைவு குருபூஜை விழாவை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் இசைக் கச்சேரி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் இசை மேதை நல்லப்ப சுவாமிகள் 61வது நினைவு குருபூஜை விழாவை முன்னிட்டு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படுவது வழக்கம், இந்நிலையில் நல்லப்ப சுவாமியின் நினைவு ஸ்தூபிக்கி நல்லப்பசாமியின் வாரிசுத்தாரர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இசை விரும்பிகள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நல்லப்ப சுவாமிகள் நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் இசைக் கச்சேரி நடைபெற்றது. இவ்விழாவில் பால்ராஜ், சிவக்குமார், இளையராஜா மாரியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இசை மாமேதை நல்ல சுவாமிகளுக்கு மணிமண்டம் கட்டி அரசு விழா எடுத்து நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். விழாவில் விளாத்திகுளம் வட்டார இசைவாணர்கள், இசை நேசர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து காெண்டனர்.