அகில இந்திய மாநாடு நிதியாக தஞ்சை மாவட்டம் சார்பில் ரூ.6.38 லட்சம் வழங்கல்
நிதி;
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநாடு மதுரையில் ஏப்.2 முதல் 6 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதையொட்டி மாநாட்டு நிதியாக ரூபாய் 6 லட்சத்து 38 ஆயிரம் நிதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் முன்னிலையில், மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகியிடம் வழங்கப்பட்டது. பிப்.19, 20 ஆகிய தேதிகளில் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். அவரிடம், இடைக்கமிட்டிகள் இதர அரங்கங்கள் சார்பில் இத்தொகை வழங்கப்பட்டது. இதில், திருவையாறு ஒன்றியம் சார்பில் ஒரு ரூபாய் 23 ஆயிரத்து 500, பூதலூர் வடக்கு ஒன்றியம் சார்பில் ரூபாய் 30 ஆயிரம், பூதலூர் தெற்கு ஒன்றியம் சார்பில் ரூபாய் 18 ஆயிரத்து 600, தஞ்சை மாநகரக் குழு சார்பில் ரூபாய் 1 லட்சத்து 8 ஆயிரம், தஞ்சை ஒன்றியம் சார்பில் ரூபாய் 20 ஆயிரத்து 140, ஒரத்தநாடு ஒன்றியம் சார்பில் ரூபாய் 21 ஆயிரத்து 800, பட்டுக்கோட்டை ஒன்றியம் சார்பில் ரூபாய் 31 ஆயிரம், மதுக்கூர் ஒன்றியம் சார்பில் ரூபாய் 12 ஆயிரத்து 500, திருவோணம் ஒன்றியம் சார்பில் ரூபாய் 25 ஆயிரம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் சார்பில் ரூபாய் 44 ஆயிரத்து 500, பேராவூரணி ஒன்றியம் சார்பில் ரூபாய் 25 ஆயிரம், அம்மாபேட்டை ஒன்றியம் சார்பில் ரூபாய் 26 ஆயிரத்து 500, எல்ஐசி அரங்கம் சார்பில் ரூபாய் 25 ஆயிரம், ஜிஐசி சார்பில் ரூபாய் 10 ஆயிரம், வங்கி அரங்கம் சார்பில் ரூபாய் 10 ஆயிரம், மாவட்டத்தின் இதர பகுதிகள் என மொத்தம் ரூ.6 லட்சத்து 38 ஆயிரம் வழங்கப்பட்டது. நிகழ்வில், மாவட்டச் செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள், இடைக் கமிட்டி செயலாளர்கள், இதர அரங்கங்களின் நிர்வாகிகள், ஒன்றியக்குழு, நகரக் குழு உறுப்பினர்கள், கட்சியினர் கலந்து கொண்டனர்.