சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி குழு 65 லட்சத்தில் அமைக்கப்பட்ட பயணிகள் நிழற் கூடம்,உயர் மின் கோபுரங்கள்திறப்பு விழா

திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் நான்கு வார்டுகளில் அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்கூடங்கள்,11 பகுதிகளில் அமைக்கப்பட்ட உயர் மின் கோபுரங்கள் திறப்பு விழா திருச்செங்கோடு எம்எல்ஏ ஈஸ்வரன் பாராளுமன்ற எம்.பி. மாதேஸ்வரன் நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு முன்னாள் நகர் மன்ற தலைவர் நடேசன்ஆகியோர்திறந்துவைத்தனர்;

Update: 2025-11-10 13:52 GMT
திருச்செங்கோடு நகராட்சி பகுதியைச் சேர்ந்த 30-வது வார்டு கொல்லப்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் பயணிகள் நிழற் கூடம், 23 வது வார்டு சந்தைப்பேட்டை பேருந்து நிறுத்தம் பகுதியில் பயணிகள் நிழற் கூடம், 22 வது வார்டு ராஜா கவுண்டம்பாளையம்பேருந்து நிறுத்தம் பகுதியில் நிழற்கூடம், ஒன்பதாவது வார்டு சூரியம்பாளையம் பேருந்து நிறுத்த பகுதியில் நிழற்கூடம் எனசட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ 23 லட்சக்கு 21 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட நாலு நிழற் கூடங்கள்,மற்றும் 30வது வார்டு கொல்லப்பட்டி ஊருக்குள்ளும்,23 வது வார்டு சந்தைப்பேட்டை பேருந்து நிறுத்தம் எதிரில்,22 வது வார்டு ராஜா கவுண்டம்பாளையம் நான்கு ரோடு சந்திப்பு பகுதி ஒன்பதாவது வார்டு சூரியம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் ஏழு மற்றும் பத்தாவது வார்டுகள் சந்திக்கும் தொண்டிக்கரடு சங்ககிரி ரோடு பகுதி 1வது வார்டு சீதாராம் பாளையம் பகுதி 6 ஆவது வார்டு கோழிக்கால் நத்தம் ரோடு சந்திப்பு 12 வது வார்டுகுமரன் கல்வி நிலையம் அருகில் 15 வது வார்டு பூக்கடை சந்திப்பு 21 ஆம் ஆண்டு கூட்டப்பள்ளி வாட்டர் டேங்க் அருகில் என 11 இடங்களில்நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில்  ரூ 41, லட்சத்து 81 ஆயிரம்மதிப்பில் அமைக்கப்பட்ட உயிரிழத்த மின் கோபுரங்கள் ஆகியவை இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.நிகழ்ச்சியில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு திருச்செங்கோடு மேற்கு நகர திமுக செயலாளர் முன்னாள் நகர் மன்ற தலைவர் நடேசன் நகர் மன்ற உறுப்பினர்கள் செல்லம்மாள் தேவராஜன் புவனேஸ்வரி ரமேஷ்,கலையரசி, ராஜவேல், மாதேஸ்வரன், தாமரைச்செல்வி மணிகண்டன், சினேகா ஹரிகரன், சம்பூரணம்,மல்லிகா,முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் பாவாயிஆகியோர் உள்ளிட்ட பகுதி பிரமுகர்கள் திமுகவினர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Similar News