கீரனூர் ஊராட்சியில் நாய்கள் கடித்து 7 ஆடுகள் பலி

காங்கேயம் அடுத்த கீரனூர் ஊராட்சியில் நாய்கள் கடித்து ஏழு ஆடுகள் பலியாகிது காங்கேயம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாய்களால் ஆடுகள் இருப்பது தொடர்கதையாக உள்ளது

Update: 2024-10-03 01:05 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை புறநகர் பகுதியில் விவசாயம் பிரதானமாகும். இங்கு விவசாயிகள் பயிர் சாகுபடியுடன் கால்நடைகளையும் வளர்த்து வருகிறார்கள். கால்நடைகளே விவசாயிகளின் வாழ்வாதாரமாக தற்போது இருந்து வருகிறது. இதற்கு தோட்டங்களில் பட்டியல் அமைக்கப்பட்டுள்ளது. தோட்டத்தில் பட்டியல் அமைத்தால் அங்குள்ள காட்டுப் பகுதியில் கால்நடைகள் மேய்வதற்கு வசதியாக இருக்கும் என்று பட்டியல் அமைத்துள்ளனர். அதன்படி தினமும் பட்டிக்கு செல்லும் விவசாயிகள் ஆடு, மாடுகளை அவிழ்த்து விட்டு காடுகளில் மேச்சலுக்கு விடுகிறார்கள். பின்னர் மாலையில் பட்டியில் அடைப்பது வழக்கம். ஆனால் சமீப காலமாக பட்டியல் அடைக்கப்பட்டுள்ள ஆடுகளை நாய்கள் கடித்துக் கொன்று விடுகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீரனூர் ஊராட்சி ராசிபாளையம், மண்ணாங்காடு பகுதியைச் சேர்ந்த சின்னச்சாமி என்பவரின் தோட்டத்தில் 30க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை தோட்டத்தில் புகுந்த வெறி நாய்கள் கடித்தது. இதில் 7 ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டது. மேலும் 3 ஆடுகள் நாய்கள் கடித்ததில் படுகாயம் அடைந்தது. இறந்த ஆடுகளின் மதிப்பு சுமார் ஒரு லட்சத்துக்கு மேல் இருக்கும் என தெரிய வருகின்றது.

Similar News